வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (19:16 IST)

’படத்தில்’ நான் என்ன எடுத்திருந்தேனோ அதை தான் பேசினேன் - நடிகர் கமல்ஹாசன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தேர்தல் பிரச்சார களத்தில் 12-05-19 அன்று  அரவக்குறிச்சி  தொகுதி பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார். கமலின் இந்த பேச்சு நாடுமுழுவதும் சர்ச்சையானது. 
இதை தொடர்ந்து அரவக்குறிச்சி, காவல்நிலையத்தில் இந்துமுன்னணி நிர்வாகி புகார் தொடுத்ததின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இதற்காக கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ல் ஆஜராகி 2 பேர் பிணையுடன் நேர் நிறுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், அப்போது செய்தியாளர்களை சந்திக்காமல், சுமார் 1 ½ மணி நேரம் கழித்து அவர் தங்கி இருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அது குறித்து பேசுவது முறையல்ல என்றதோடு, மேலும், இந்தியாவில் பேச்சுரிமை கருத்து சுதந்திரம் உள்ளது என்றதோடு, திருப்பரங்குன்றம் பகுதியில் அதே போல பிரச்சாரத்தில் பத்திரிக்கையாளர்களை மட்டுமே குற்றம் சாட்டியது குறித்து கேட்ட போது, இன்றும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான் தலையும், வாலும் புரியாமல், திணித்து செய்தியாக்கியது தான் இந்த நிலை என்றார். ஒரு கலைஞனாக எல்லா தரப்பு மக்களையும் நீங்கள் திருப்தி படுத்தியுள்ளீர்கள்,. ஆனால் அரசியல் கட்சியின் சார்பில், மக்களை திருப்தி படுத்த முடியவில்லை என்று நினைத்துள்ளீர்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஹேராம் படத்தில் நான் எழுதி நடித்தது தான் என்றார்.
 
பள்ளப்பட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் சென்னை மெரினாவிலும் பேசினேன் என்றார். அது குறித்து எங்கு வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார். 
 
சென்ற நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல்களில் தாங்கள் வாங்கிய வாக்கு வித்யாசத்தினை வைத்து பஞ்சாயத்து தேர்தலை எப்படி உங்கள் கட்சி சந்திக்க உள்ளது என்றதற்கு, அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றோம், மக்கள் எங்களுக்கு பெரும் பங்கேற்பு கொடுக்க உள்ளனர். மேலும், சென்ற தேர்தல்களில் நாங்கள் வாங்கிய வாக்கு வங்கிகளை பார்த்து அறிஞர்களே பிரமித்து உள்ளதாகவும் கமலஹாசன் தெரிவித்தார். 
 
மேலும், இந்தி திணிப்பு மற்றும் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்கள் மீது திணிக்க கூடாது என்றார்.
 
ஆகவே, கெயில், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது அரசியல் வாதிகளும், பத்திரிக்கைகளும் ஒன்று சேர வேண்டுமென்றார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சரவையில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து தங்கள் கருத்து கேட்டதற்கு,, அது குறித்து பேச வேண்டுமென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். என்றதோடு, தனக்கு விமானத்திற்கு நேரமாகி விட்டதாக கிளம்பி சென்றார்.