1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (14:38 IST)

அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி !

ஒட்டு மொத்த நாடும் எதிர்பார்த்திருந்த அயோத்தி சர்ச்சை நில வழக்கில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஒரே தீர்ப்பாக வழங்கினர்.
அதில், அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம். அங்கு  ராமர் கோயில் கட்டலாம் எனவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். சன்னி வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கூறியுள்ளதாவது :
 
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.