''தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்''- பிரதமர் மோடி
பாரத பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று தமிழகம் வந்த நிலையில், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
அங்கு, ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சாலைவழியில் சென்றார். அங்கு, சென்னையில் இருந்து, கோவைக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள விவேகானதர் இல்லத்தின் உள்ள விவேகாந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி, சென்னை ராமகிருஷ்ணணா மடத்தின் 150 வது விழாவின் பிரமர் மோடி பேசியதாவது:
நான் தமிழ் நாட்டு மக்களையும் சென்னையையும் நேசிக்கிறேன். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பற்றிருக்கிறது என்று கூறினார்