விஜய் பற்றி எனக்கு தெரியாது...10 லட்சம் பேர் கொண்ட கும்பல் இருந்தால் கட்சியா?- குருமூர்த்தி
துக்ளக் வார இதழில் ஆசிரியர் குருமூர்த்தியிடம் இன்று செய்தியாளர்கள் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிக் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் எனக்கு விஜய் பற்றி தெரியாது...10 லட்சம் பேர் கொண்ட கும்பல் இருந்தால் கட்சியா? என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாவது:
''விஜய் பற்றி எனக்கு தெரியாது சார்….சினிமாவே தெரியாது..அப்போ விஜயை பற்றி எப்படி தெரியும்? தமிழ்நாட்டில் …என்னைப் பொருத்தவரைக்கும்…..இனிமேல் சினிமாவில் இருந்து வந்து அரசியல்வாதியா பெரியளவில் வெற்றியடைய முடியும் என்று எனக்குத் தோணல…இது தப்பாகூட இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஒரு கட்சியை ஆரம்பிக்க காரணம், அவர் 30 ஆண்டுகள் திமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திமுகவில் இருந்தது. திமுகவுக்குள் அதிமுக இருந்ததால் அவரால் கட்சி தொடங்க முடிந்தது. ரசிகர்கள் வைத்து கூட்டத்தைக் கட்சியாக மாற்ற முடியாது.
இதே பிரச்சனைதான் ரஜினிக்கும் வந்தது.
பாட்னாவில் கூடிய கும்பலை அது கூட்டணியாக மாறுமா என்பது கேள்விக்குறி…10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்…
இந்த முயற்சிகள் பெரியளவில் வெற்றி பெறாது. ஒரு கட்சி உருவாக 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும். இதெல்லாம் இன்றி கும்பலை வைத்து கட்சி ஆரம்பிக்கிறதாக இருந்தால் அதற்கு ஏராளமான தன்னம்பிக்கை உள்ளது என சொல்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.