செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (23:05 IST)

தினகரனை ஆதரிக்கவில்லை: கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் தகவல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் தினகரனுக்கு ஆதரவு குவிந்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் அவருடைய அணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் குவிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த எம்.எல்.ஏவும், எம்பியும் தினகரன் அணிக்கு செல்லும் வகையில் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், தினகரன் அணிக்கு செல்லவுள்ளதாகவும், அவர் விரைவில் தினகரனை சந்தித்து தனது ஆதரவை வழங்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் தற்போது மறுத்துள்ளார். சற்றுமுன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தினகரனை நான் ஆதரிக்கவில்லை, அந்த செய்தி தவறானது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.