திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (22:17 IST)

ரஜினியின் முடிவு தவறாகத்தான் முடியும்: தினகரன்

சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார். அதிமுகவை தோற்கடித்து, திமுகவை டெபாசிட் இழக்க செய்த தினகரனுக்கு இந்த இரு கட்சிகளையும் தமிழக அளவில் அனைத்து தொகுதிகளிலும் எதிர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது.

இந்த நிலையில் திடீரென ரஜினி களத்தில் இறங்கியுள்ளதால் அவருக்கு இன்னொரு போட்டியாளர் உருவாகியுள்ளார். தற்போது அவரையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போதிருந்தே ரஜினியை எதிர்க்க தொடங்கிவிட்டார்

தினகரனே ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருக்கும் நிலையில் அரசியலில் ஆன்மிகம் தவறாகத்தான் முடியும் என்று கூறியுள்ளது அவரது சறுக்கலை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பழங்கால ராஜாவுக்கு அறிவுரை கூற ராஜகுரு என்ற ஒருவர் இருப்பார். அவர் ஆன்மீகவாதிதான். எனவே ஆன்மீக அரசியல் காலங்காலமாக இருந்து வந்துள்ள நிலையில் ஆன்மீக அரசியல் தவறாக முடியும் என்று தினகரன் கூறியிருப்பது எடுபடாத ஒன்றாக கருதப்படுகிறது.