திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (12:16 IST)

இந்தப் படத்தை தியேட்டரில் காண்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.- அன்புமணி ராமதாஸ்

தங்கர்பச்சான் இயக்கி உள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தைத் தியேட்டரில் பார்க்க ஆர்வமாக உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்,. இவர், அழகி,  ஒன்பது ரூபாய் நோட்டு,  பள்ளிக்கூடம், களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் இயக்கத்தில்  உருவாகியுள்ள  திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில், பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு,  மஹானா, சஞ்சீவி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தைப் பார்க்க ஆர்வமுடன் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’இயக்குனர் தங்கர் பச்சானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இயக்குனர்கள்  பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் உன்னத படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.  செப்டம்பர் 1-ஆம் நாள் வெளியாகவிருக்கும் அத்திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன் ’’என்று தெரிவித்துள்ளார்.