எடப்பாடி அறிமுகப்படுத்திய கார் வெடித்து சிதறியது – மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் மாடல் எலெக்ட்ரிக் கார் கனடாவில் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒருவர் ஹூண்டாய் கோனா மாடல் எலெக்ட்ரானிக் காரை வாங்கியுள்ளார். அவரது கேரேஜில் இருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட கசிவினால் கார் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துமாறு அரசாங்கம் வலியிறுத்தி வருகிறது. அதன் முதற்கட்டமாக இந்த ஹூண்டாய் கோனா என்ற மின்சாரக் காரை முதல்வர் எடப்பாடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.