செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (13:20 IST)

கணவன் மனைவி வெட்டிக்கொலை ! பழிக்குப் பழிவாங்கிய கொடுரம்

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் பாண்டி ( 43) இவர் திருப்பூரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.இவரது மனைவி பஞ்சவர்ணம்(40). இவருக்கு சந்திரசேகர், அசோக்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த வருடம் இதே பகுதியில் வசித்து வந்த குமரேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில்  சந்திரசேகர், அசோக்குமார் ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அதனால் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜானீனில் வெளியே வந்தனர்.
இதனையடுத்து பாண்டு தன் மனைவி மகன்களுடன் திருப்பூர்  பகுதிக்குச் சென்று கூலி வேலை செய்து வந்தனர். 
 
இந்நிலையில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட குமரேசனின் உறவினர்கள் பாண்டியின் குடும்பத்தை பழிவாங்க திட்டம் தீட்டி வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று பஞ்சவர்ணம் வீட்டில் இருந்தார். அவரது மகன்கள் வெளியே சென்றிருந்தனர். பாண்டி திண்டுக்கல்லை அடுத்த நல்லாம் பட்டியில் நெசவாளர் காலனிக்குச் சென்றிவிட்டு சில தினங்களுக்கு முன் திரும்பவும் திருப்பூர் விட்டிற்கு வந்துவிட்டார்.
 
அப்போது சிலர் பஞ்சவர்ணம் இருந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டை விசினர். பெருத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது. பஞ்சவர்ணம் வெளியே வந்தார். வீட்டிற்கு வெளியே காத்திருந்த 6 பேர் அவரை அரிவாளால் வெட்டியபோது. பாண்டி வெளியே வந்தார். மனைவி துடிதுடிப்பதைப்  பார்த்த அவரை கும்பல் விடாமல் துரத்திய கும்பல் அவரையும் வெட்டிச் சாய்த்தது.
 
இந்தக் தகவல் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். தாய் தந்தை கொலை செய்யப்பட்டத்தைப் பார்த்த சந்திரசேகர் மற்றும் அசோக்குமார் இருவரும் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக வைப்பதாக இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.இது பழிவுக்கு பழி வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.