வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (13:19 IST)

கற்பழித்த ஆண் மீது தீயோடு சென்று பழிவாங்கிய பெண்!

மேற்கு வங்கம்  மாநிலத்தில்  மால்டா என்ற  பகுதியில் இளம் பெண் வசித்து வந்தார். அவருக்கு 2 பெண்குழந்தைகள்  உள்ளனர். சம்பவத்தன்று இளம் பெண்ணின் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட மக்கள் வீட்டில் சென்று பார்த்த போது இருவரும் வீட்டுக்குள் தீயில் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
மால்டா என்ற பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணில் வீட்டுக்குள் புகுந்த ஆண் அப்பெண்ணைக் கற்பழித்துள்ளார். பின்னர் இது யாருக்கும் தெரியக்கூடாது என்று  பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். 
 
தன் உடலில் தீ பற்றி எரியும் நிலையில் அந்த நபரையும் அவர் பிடித்துக் கொண்டார் அப்பெண். இதனால் இருவரது கை, கால்கள், எரிந்தன.
 
இந்த தீவிபத்தில் ஆண் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிகிறது. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.