1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (12:22 IST)

செல்போனில் கடலை போட்ட மனைவி : காலை உடைத்த கணவன்

தன்னுடைய மனைவி வெகுநேரம் செல்போனில் யாரிடமோ வெகுநேரமாக் பேசிக் கொண்டிருந்ததில் ஆத்திரம் அடைந்த கணவன், அவரின் காலை உடைத்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.


 

 
கோவை சாய்பாபா காலணி, கே.கே.புதூரில் வசிப்பவர் மணிகண்டன். இவர் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று காலை, இவரின் மனைவி அன்னபூரணி(29) செல்போனில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட மணிகண்டன், யாரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அன்னபூரனி, தனது உறவினர் ஒருவருடன் என்று பதில் கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகம் அடைந்த மணிகண்டன், இதுபற்றி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மணிகண்டன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அன்னப்பூரணின் காலில் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இதில் அலறித்துடித்த அவரை,  மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
 
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, மணிகண்டன் வீட்டில் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்தனர். 
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.