எம்பியே இல்லாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவா? திமுகவை கிண்டல் செய்யும் மைத்ரேயன் எம்பி

வியாழன், 19 ஜூலை 2018 (14:26 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக திமுக கூறியுள்ளது. மேலும் அதிமுகவும், அதேபோல் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக எம்பி மைத்ரேயன் இதுகுறித்து கூறியபோது, 'மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக எப்படி ஆதரவு தரும்? என்றும் திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத நிலையில் ஆதரவு என்பது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தெலுங்கு தேச கட்சி ஆந்திர மாநிலத்தின் தேவை ஒன்றுக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாகவும், அதனால் இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு கிடையாது என்றும் காவிரி பிரச்சனையின்போது எந்த மாநிலமும் தமிழகத்திற்கு ஆதரவு தரவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

டேன்ஸ் ஆடக்கூடாதா?!.. திருமணத்தை நிறுத்திய மணமகளின் தந்தை...

விஜய்க்கு போன தலித் ஓட்டுகள்!.. புலம்பும் திருமாவளவன்!. நடப்பது என்ன?...

சென்னையில் உருவாகும் மாபெரும் கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா: முதற்கட்டப் பணிகள் தீவிரம்!

இனி டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.. விரைவில் வரவிருக்கும் உத்தரவு...

சென்னை மட்டுமல்ல மதுரை, கோவைக்கும் ஏசி பஸ்.. 2000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments