Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (16:49 IST)
மருத்துவமனையில் டிவி பார்க்கும் கருணாநிதி - புகைப்படம் வெளியீடு
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனை வந்தவண்னம் உள்ளனர்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாள் அவர் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது உடல் நிலை குறித்து திமுக தொண்டர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியோடு, கருணாநிதி தொலைக்காட்சி பார்க்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், அவர் வருகிற 23ம் தேதி வீடு திரும்புவார் என திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலினும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த செய்தி திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.