திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 2 மே 2024 (17:08 IST)

மயிலாடுதுறை அருகே கோர விபத்து.! தலைநசுங்கி 3 பேர் பலி.!

Accident
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷக்கீன், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நண்பர் வீட்டு நிகழ்விற்கு சென்று விட்டு இன்று ஒரே இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  

அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் வந்த 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர், அவர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மூன்று பேரும் உயிரிழந்தனர். 


அதனைத் தொடர்ந்து படுகாயம் ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் இறந்த நபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.