ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம்- கமல்ஹாசன் டூவீட்
இன்று ஆங்கிலப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே பல்வேறு தலைவர்கள் தங்களின் புத்தாண்டு தின வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திராவிட கட்சிகளுக்குப் போட்டியாக கமல்ஹாசன் தேர்தலை சந்திக்கவுள்ளார்.
அவருக்கு எதிராக அதிமுக அதிக விமர்சனங்களைத் தெரிவிக்க கமலும் கடுமையாக விமர்சித்து, சமீபத்தில் லஞ்சப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.அவர் செல்லுமிடமெல்லாம் பிரச்சாத்தின்போது, மக்கள் கூட்டம் கூடுகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.