புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (10:48 IST)

ஒரே நாளில் கொலை… தற்கொலை – ஓரிணச்சேர்க்கையாளர்கள் மரணத்தில் மர்மம்!

திண்டுக்கல் பகுதியில் ஓரிணச்சேர்க்கையாளர்கள் இருவரும் ஒரே நாளில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரும் ராமச்சந்திரன் என்பவரும் ஓரினசேர்க்கையாளர்கள் என சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்த அவரது இணையரை தேட அவரும் மர்மமான முறையில் மாமரம் ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து இருவரும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.