திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (23:11 IST)

பள்ளிகளில் இன்று, நாளை விடுமுறை அறிவிப்பு

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் சரியான முறையில் தேர்தல் நடைபெறாததால் மறு வாக்குப்பதிவு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால், வாக்குசாவடியாக இயங்கும் பள்ளிகளில் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் இடத்தில் மட்டும் விடுமுறை எனவும் நாளை வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.