Daily Horoscope
✕

வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்! – ஹவுஸ் ஓனர் வீட்டை எரித்த ஆசாமி!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 15 அக்டோபர் 2020 (12:11 IST)
தூத்துக்குடியில் வீட்டை காலி செய்ய சொன்ன ஹவுஸ் ஓனர் மீது ஆத்திரத்தில் அவரது வீட்டை ஆசாமி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு கார்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பல வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு அருகேயே நடராஜன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். நடராஜனின் வீட்டில் மரிய அந்தோணி என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அந்தோணி அடிக்கடி குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வதால் அவரை வீட்டை காலி பண்ணி அனுப்பியுள்ளார் நடராஜன்.

இதனால் நடராஜன் மீது ஆத்திரத்தில் இருந்த மரிய அந்தோணி இரவு மது அருந்தி விட்டு வந்து நடராஜன் வீட்டிற்கு முன்னாள் நின்றிருந்த பைக்குகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த 9 பைக்குகள் எரிந்து சாம்பலான நிலையில் நடராஜன் வீட்டிற்குள்ளும் தீ பற்றியதால் உள்ளே உறங்கி கொண்டிருந்த அவர் மகன் அண்ணாமலை தீ பற்றி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். நடராஜன் தீ காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மரிய அந்தோணியை தேடி வருகின்றனர். மொட்டை மாடியில் படுத்துறங்கியதால் நடராஜனின் மனைவி மற்றொரு மகன் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபிராஜ் டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments