கிடுகிடுன்னு ஏறும் பெட்ரோல், டீசல் விலை!! பொதுமக்கள் கடும் அவதி
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை கடந்த வருட முடிவில் வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.
5 மாநில தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அத்தியாவச பொருட்களின் விலை வாசி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.73.85 க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.69.41 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.