திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 மார்ச் 2018 (15:47 IST)

டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
 
தினகரன் ஆதரவாளர்களான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 1-ஆம் தேதி தலைமை செயலகத்தில் போலீசாரின் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடப்பதாக பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து இருவர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, தலைமை செயலகத்தில் அனுமதியின்றி நுழைந்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவரும் கைதாகாமல் இருக்க முன் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்நிலையில் இன்று, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர்களை தேவைபட்டால் சென்னை கோட்டை காவல்நிலையத்தில் ஆஜராகவும் மற்றும் மதுரையில் தங்கி 2 வாரம் காவல் நிலையத்தில் கையழுத்து போடவும் உத்தரவிட்டுள்ளது.