செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (06:56 IST)

பங்காரு அடிகளார் மறைவு: மேல்மருவத்தூரில் பலத்த பாதுகாப்பு

pangaru adikalar
பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மேல்மருவத்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரத்தை சேர்ந்த 2,000  போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 
 
பங்காரு  அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
 
பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.  ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்.  மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார்.  அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும்.  அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள்.  ஓம் சாந்தி.
 
 
Edited by Siva