ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பொதுமக்கள்.. தாம்பரம் அருகே போக்குவரத்து நெரிசல்..!
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் இன்று அதிகாலை சென்னைக்கு திருப்பிக் கொண்டிருப்பதால் தாம்பரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் காரணமாக வெள்ளி அன்று விடுமுறை என்பதால் அதன் பின்னர் சனி ஞாயிறு விடுமுறையை முடித்துவிட்டு நேற்று இரவு தென் மாவட்டத்திலிருந்து கிளம்பிய பொதுமக்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பி கொண்டு இருக்கின்றனர்.
ஒரே நேரத்தில் சென்னைக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து கொண்டிருப்பதால் தாம்பரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கிளாம்பாக்கம் வந்திறங்கிய பொதுமக்கள் அங்கிருந்து சென்னை நகருக்குள் வருவதற்காக நகர பேருந்து மற்றும் ஆட்டோக்களில் வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் போக்குவரத்து போலீசார் இதனை சரி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva