1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (15:35 IST)

ஓரிரு மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை !

இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஏற்கனவே என்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை 17 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.