Daily Horoscope
✕

சென்னையில் கனமழை: அலுவலகத்தில் இருந்து திரும்பும் பொதுமக்கள் அவதி..!

Written By Siva
Updated: புதன், 29 நவம்பர் 2023 (17:56 IST)
கடந்த ஒரு மணி நேரமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து அலுவலகத்தில் இருந்து திரும்பும் பொதுமக்கள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
 
இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதை அடுத்து வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக அலுவலகத்தில் இருந்து திரும்பும் பொதுமக்கள் பெரும் அவதியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edited by Siva

எல்லாம் காட்டு

சிவமொக்கா தசரா ஊர்வலத்தில் திடீரென மிரண்ட யானை: 650 கிலோ வெள்ளி அம்பாரி கீழே விழுந்து விபத்து!

இது எங்க போய் முடியுமோ தெரியல!.. கனிமொழி எம்.பி. பேட்டி!..

7 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!.. மீண்டும் தீவிரமடையும் அமெரிக்கா - ஈரான் போர்!..

தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம்!.. தவெக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு...

வெள்ளை மாளிகை கருப்பாக மாறும்!.. அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments