Daily Horoscope
✕

அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Written By Mahendran
Updated: வியாழன், 6 ஜூலை 2023 (17:46 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து தற்போது சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து உள்ளதை அடுத்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், திருச்சி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வரும் நிலையில் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

மீண்டும் அன்பில் மகேஷ் ஜாமின் மனு.. சென்னை ஐகோர்ட்டில் வாதம்.. இந்த முறையாவது கிடைக்குமா?

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்.. ஐஜி அந்தஸ்திலான அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.. நீதிபதி உத்தரவு...

இந்த முறை ஆக்சன் வேற மாதிரி இருக்கும்!.. தமிழக அரசை எச்சரித்த நீதிமன்றம்...

இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments