வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்.. இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான்..!
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் மிக்ஜாம் புயலுக்கு பின் மழை நின்றது என்பதை பார்த்தோம். ஆனால் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Siva