திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (17:01 IST)

பொள்ளாச்சியில் ஒரு மணி நேரம் கனமழை.. சாலையில் காட்டாற்று வெள்ளம்..!

பொள்ளாச்சியில் ஒரு மணி நேரம் கன மழை பெய்ததை அடுத்து அங்கு உள்ள முக்கிய சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஓடுவதை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக பொள்ளாச்சியில் கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
மேலும் மழைக்காலம் போல் அங்கு உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்றும் ஒரு சில வீடுகளில் கூட தண்ணீர் புகுந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
காட்டாற்று வெள்ளம் போல் கோடை நேரத்தில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து நின்றனர். மேலும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி உள்பட அதன் சுற்றுப்பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி என் நிலையில் தற்போது மழை பெய்து உள்ளதால் இந்த கன மழை மக்களை குளிர்வித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது பெய்து உள்ள மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran