ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (07:54 IST)

கேரளாவில் தொடர் கனமழை.. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

Rain
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளது.
 
மேலும் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
 
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா  ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயரும் என்றும் மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையுடன் பலத்த காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva