வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2023 (15:50 IST)

என் வளர்ச்சியால் என் மீது அவருக்கு பொறாமை - சீமான்

seeman -vijayalaskmi
கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்க காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக , சீமான் மீது  நடவடிக்கை எடுக்க போலீஸார் தயாராகி வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், சீமான் மீது கொடுத்த புகார் தொடர்பாக விஜயலட்சுமி இன்று இரண்டாவது நாளாக துணை ஆணையர்  விசாரணை மேற்கொண்டார்.

நேற்று திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்த நிலையில், இன்று மதுரவாயில் காவல் நிலையத்தில் தொடர்ந்து அவரிடம் 4 மணி  நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர்  நடிகை விஜயலட்சுமி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக  சீமான் செய்தியாளார்களிடம் கூறியதாவது:

‘’விஜயலட்சுமியுடன் எனக்கு திருமணமாகி இருந்தால் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட வேண்டியதுதானே! சட்டப்படி பதிவு திருமணமாகி இருந்தால் எடுத்துப் போடலாம்.. இவை எதுவுமே இல்லாமல் அவர் வாய்க்கு வந்ததை பேசி என்னை ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதை எப்படி இந்தச் சமூகம் ரசிக்கிறது’’ என்றார்.

மேலும், ‘’விஜயலட்சுமி என்னுடன் வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், வீரலட்சுமிக்கு என்ன இருக்கு..என் வளர்ச்சியால்  என் மீது அவருக்கு பொறாமை உள்ளது’’ என்று தெரிவித்தார்.