1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (16:16 IST)

மணல் கடத்தலுக்கு உதவினால் குண்டர் சட்டம் பாயும்; உயர் நீதிமன்றம் அதிரடி

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 
மணல் கடத்தல் வழக்கில் பாபு என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து பாபுவின் மனைவி வேடியம்மாள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரணியன் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
 
அரசு அதிகாரிகள் உதவி இல்லாமல் மணல் கடத்தல் நடப்பது சாத்தியமற்றது என்றும் ஒரு வாரத்தில் அனைத்து விசாரணை துறைக்கும் மணல் கடத்தல் சம்பவத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.