1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (18:22 IST)

காவி உடை திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த ஹெச்.ராஜா

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து ஹெச்.ராஜா திருவள்ளுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து பின் எதிர்ப்பிற்குள்ளாகி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் டிவிட் நீக்கப்பட்ட நிலையில் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில், ”தமிழுக்கு நலம் சேர்த்த வள்ளுவன் தந்த திருக்குறள் வழியில் சிந்தனை செய்வோம், அனைவருக்கும் திருவள்ளுவர் தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.