1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (13:28 IST)

விஷச்சாராயம் விவகாரத்தல் விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடையும்..! ஹெச்.ராஜா

H Raja
விஷச்சாராயம்  விவகாரம் காரணமாக ஆளும் திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வியடையும் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார்.
 
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4700 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 870 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த கள்ளச்சாராயம் கடந்த நான்கு நாட்களில் உற்பத்தி ஆனதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்றும் கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்து போனார்கள், அதில் கைது செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறினார். கள்ளக்குறிச்சி மக்கள் சாவை பத்து லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார்கள் என்றும் ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் படுதோல்வி அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran