வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (22:22 IST)

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா அறிவிப்பால் பரபரப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: சவாலை ஏற்போம்: தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவாராம் ஸ்டாலின். பாஜக இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டக் கொன்ற திமுக விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா.? நடிப்பதா? என்று பதிவு செய்துள்ளார்.