வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 ஆகஸ்ட் 2018 (16:34 IST)

விமானத்தில் பெட்ரோல் இல்ல; புஷ்பக விமானம் கொண்டு வரட்டா: எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

எச்.ராஜா எதை பற்றியாவது அல்லது யார் பற்றியாவது டிவிட்டரில் போட்டு விட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அதற்கு ஏற்றார் போல் நெட்டிசன்களும் எச் ராஜா என்றாலே பாரபட்சமின்றி கலாய்த்துவிடுகின்றனர். 
இந்நிலையில் எச்.ராஜா ஜெட் ஏர்வேஸை திட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ஜெட் விமானத்தில் பயணிப்பதே பயனில்லாத ஒன்றாகும். 40 நிமிடங்கள் தாமதமானது. போதிய எரிபொருள் இல்லாததால் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானம் ஜெய்ப்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது. பயணிகள் குறித்து அவர்களுக்கு கவலையில்லை என்று டிவிட் செய்து இருந்தார். 
 
டெல்லியில் விமான போக்குவரத்து நெரிசல் காரணமாக மட்டுமே விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது ஜெட் என ஏர்வேஸ் விளக்கம் அளித்தது. தர்போது இதை வைத்து எச்.ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 
 
அவற்றில் சில உங்களுக்காக...