செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (22:12 IST)

பிஷப் பிராங்கோவை தந்திரி ஆக்குங்கள்: சபரிமலை ஜோக் சொன்ன குருமூர்த்தி

சபரிமலை விவகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஐப்பசி மாதம் நடை திறக்கப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இனி அடுத்த மாதம் நடை திறக்கப்படும்போது பெண்கள் நுழைய முற்பட்டால் உயிரிழப்பு நேரும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக ஆதரவாளரும் துக்ளக் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி தனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஜோக் வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சபரிமலை தந்திரியாக பிஷப் பிராங்கோவை நியமனம் செய்தால் 60 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட சபரிமலைக்கு வர அஞ்சுவார்கள்' என்று பதிவு செய்துள்ளார். இது ஜோக்காக இருந்தாலும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது.