திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (01:06 IST)

வைகை அணை அருகே பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு

வைகை அணை அருகே பாலம் கட்டுமாணப்பணியில் ஈடுபட்ட வடநாட்டு பணியாளர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


 

 
வைகை அணை அருகே வைகையாற்றில் புதிய பாலம் கட்டுமாணப்பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரிஸாவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இக்குழுவை சேர்ந்த முனிராம் (38) என்ற இளைஞர் வெள்ளிக்கிழமை காலை பாலப்பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வலதுகாலில் முழங்காலுக்கு கிழே தீடீரென பொருள் வந்து தாக்கியதால் காயமடைந்தாராம்.
 
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை வைகை அணை ஆரம்பசுகாதாரநிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இது தோட்டா போன்று உள்ளது என கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
சம்பவத்தன்று வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் வனக்காவலர்களுக்கு துப்பாக்கிசுடும் பயிற்சி நடைபெற்றுள்ளது. அங்கிருந்து தவறுதலாக பணியாளர் மீது துப்பாக்கி குண்டு தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.