1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (13:13 IST)

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்? அப்படி என்ன வருமானம்?

Nirmala Seetharaman

அதிக வருமானம் ஈட்டியும் ஜிஎஸ்டி வரி கட்டாமல் இருந்ததாக தமிழ்நாட்டில் பானிபூரி வியாபாரி ஒருவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST வரிவிதிப்பு அமலில் உள்ள நிலையில் பல வகை உணவுகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களுக்கும் தொடர்ந்து ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருவது மக்களிடையே விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவருக்கு ஜிஎஸ்டி வரிப்பதிவை கட்டாயமாக்கி அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ஆன்லைன் பேமண்ட் மூலம் விற்பனையாளரின் பரிவர்த்தனைகளை கணக்கிட்டபோது ஆண்டு வருமானம் ரூ.40 லட்சத்தை தாண்டுவதால் அதற்கான ஜிஎஸ்டி வரியை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இது பானிபூரி விற்பனையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K