குரூப் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ஸ்டாலின்
குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை தேர்வுகளில் இந்த மாதிரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதன் வாணி வேர் எங்கு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய விசாரணையை நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.