Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெட்டுக்கிளி வராது.. ஒருவேளை வந்தா இதை செய்யுங்க! – வேளாண்துறை வழிமுறை!

Written By Prasanth Karthick
Updated: புதன், 27 மே 2020 (14:21 IST)
வட மாநிலங்களில் வேளாண் நிலங்களை சூறையாடி வரும் வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள செய்யவேண்டிய வழிமுறைகளை தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள் படை மத்திய பிரதேசதம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண் வயல்களை துவம்சம் செய்து வருகிறது. இதுவரையிலும் தக்காண பீடபூமியை கூட தாண்டியிராத இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியா மாநிலங்களில் புகுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ள விவசாயிகள் தற்போது வெட்டுக்கிளி படையெடுப்பால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வராது என்றாலும், வந்தால் அவற்றை ஒழிக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை தமிழக வேளாண் துறை விளக்கியுள்ளது. அதன்படி,

பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.

மாலத்தியான் மருந்தை டிராக்டர்கள் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலமாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் தெளிக்கலாம்.

வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி போன்ற பறவைகளை அதிக அளவில் வளர்க்கலாம்
அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தை ஒட்டுமொத்தமாக வான்வெளியிலிருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

Cognizant ஊழியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்க தடை!.. அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்!...

இன்று தங்கத்தில் ரூ.50000 முதலீடு செய்தால் 2036ஆம் ஆண்டு எவ்வளவு கிடைக்க வாய்ப்பு? ஆச்சரிய தகவல்...!

முன்னாள் தலைமை செயலாளர் தற்கொலை.. கடிதத்தில் முக்கிய தகவல்..

திருமலைக்கு போவது இனி ரொம்ப ஈசி.. ஆனந்த் அம்பானி வழங்கும் 25 மின்சார பேருந்துகள்.. இலவசமா? கட்டணமா?

செப்டம்பர் முதல் டிசம்பர்!.. புயல் தாக்கம் அதிகமாக உள்ள இந்திய மாநிலங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments