வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2024 (07:03 IST)

தஞ்சை பல்கலை துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்த கவர்னர்.. ஓய்வு பெறுவதற்கு முன் நடவடிக்கை..

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து  துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்கப்பட்டது.
 
ஆனால் ஆளுனரின் விளக்கத்திற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva