புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Siva
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (15:27 IST)

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் .. இயந்திரங்களை உருவாக்குவார்- உ.பி. கவர்னர்

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்றும் அவர் ஆறு மாதம் தூங்குகிறார் என்று கூறுவது தவறு என்றும், அந்த நேரத்தில் அவர் ரகசியமாக இயந்திரங்களை உருவாக்குவார் என்றும் உத்தரபிரதேச மாநில கவர்னர் விழா ஒன்றில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசிய போது, "கும்பகர்ணன் ஆறு மாதம் தூங்குவார் என்று கூறுகின்றனர். ஆனால், அது தவறு. கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர். பொதுவெளியில் வரக்கூடாது என ராவணன் தடை விதித்திருந்ததால், ஆறு மாத காலம் ரகசியமாக இயந்திரங்களை அவர் தயாரித்தார். 
 
சீதையை ராவணன் விமானத்தில் கடத்திச் சென்றான் என்பது கூட நம் மக்களுக்கு தெரியாது. நமது நூலகங்களில் இந்திய அறிவியல் பாரம்பரியத்தின் நூல்கள் நிறைந்துள்ளன. மாணவர்கள் அவற்றை படிக்க வேண்டும். இந்தியாவின் செழுமையான அறிவை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்," என்று பேசினார்.
 
உத்தரபிரதேச மாநில கவர்னர் பேசிய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்ரியா கூறிய போது, "பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் இந்த ஆழ்ந்த அறிவு வழங்கப்பட்டுள்ளது," என்று கேலி செய்துள்ளார்.
 
 
Edited by Siva