1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (08:23 IST)

தமிழக ஆளுநரின் விரோத செயல்பாட்டை கண்டித்து பொது மக்களே கொந்தளித்து தீர்வுகாண்பார்கள் -தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் பேச்சு......

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூரில் வசிக்கும் தனது நண்பரும் இயக்கத் தோழரும் பழனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழ் தேசிய முன்னணி தலைவர் 
பழ.நெடுமாறன் சந்தித்து நலம் விசாரித்தார்.  
 
இதனை தொடர்ந்து பேசிய பழ .நெடுமாறன்:-
 
தமிழக ஆளுநர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே நோக்கமாக கொண்டுள்ளார். 
 
இது அனைத்து எதிர்கட்சிகள் ஆணும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் செய்து வருகின்றார்கள். அரசியல் சட்டம் ஆளுநரின் அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு ஒரு மரண தண்டனை கைதியின் தண்டனையை ரத்து செய்வது நேரடியாக ஆளுநருக்கு கிடையாது அமைச்சரவை கூட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கு கையப்பமிடுவதை ஆளுநரின் கடமையாகும்.
 
ஆளுநரின் நேரடி அதிகாரம் பிரிட்டிஷ் நாடாள மன்றம் முறை ஆனால் நம் நாட்டில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற முடிவுகளுக்கு கையொப்பமிடுவதை ஆளுநர்களின் கடமையாகும். தற்போது தொடர்ந்து ஆளுநர்களின் விரோத  நடவடிக்கையால் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை முடிவு காண்பார்கள். 
 
இளம் தலைமுறைகள் அரசியலுக்கு வர வேண்டும் இளைஞர்கள் அரசியலில் தூய்மைப்படுத்த   முன்வர வேண்டும். இதனால் இளைஞர்களுக்கு சமுதாய பொறுப்புணர்வு மற்றும் கடமையும் உள்ளது. சமுதாயத்தில் உள்ள 
சீர்கேடுகளை அகற்றுவதற்கு இளைஞர்கள் அக்கடமைகளை செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டும் நன்மையில்லை நாட்டிற்கும் நன்மை ஏற்படும்.
 
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை மற்றும் மாநில அரசு கட்டுப்பாட்டில் தொல்லியல் துறை என இரண்டு உள்ளது . இந்திய அரசின் நோக்கம் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்கள் நாகரிகம் ஆராய்ச்சி செய்ததில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த கல்வெட்டுகளில் பெரும் பகுதி தென்னிந்திய கல்வெட்டுகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழர்களின் கல்வெட்டுகளே உள்ளது. இங்கு ஆய்வு நடத்த வேண்டிய இடங்கள் 400க்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. கீழடி ஆய்வு அறிக்கை வெளியிடுவதற்கு அதிகாரப்பூர்வமான முடிவுகளை இந்திய அரசு எடுக்கப்படவில்லை. காரணம் இதையெல்லாம் வெளியிட்டால் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் தமிழர்கள் நாகரிகம் என தெரியவரும் என்பதற்காகவே தொடர்ந்து மத்திய அரசு மறைத்து வருகின்றனர்.
 
வெளிநாட்டில் பணி புரியும் நம் நாட்டு மக்கள் அங்கு சம்பாதித்த பணத்தை கொண்டு நம் நாட்டில் வியாபாரம் செய்து நமது நாட்டிற்கும் நமக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும், விவசாயிகள் பழமையான முறையை பின்பற்றுவதில் இருந்து நவீன முறைக்கு மாறி உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் முறையைக் கையாண்டு லாபம் ஈட்ட வேண்டும் என தெரிவித்தார்.