செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (15:31 IST)

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்..! ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கோரிக்கை..!!

karthi chidambaram
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
 
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி  வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர்  பதவியில் நீடிக்க கூடாது என்றும் உடனடியாக ஜனாதிபதி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
 
அரசின் உரையை படிப்பது ஆளுநர் கடமை என்று தெரிவித்துள்ள அவர், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை ஏற்றுக் கொள்ள முடியாத கட்சியாக தான் மக்கள் பார்க்கின்றனர் என்றும் கூறினார்,

 
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையான கூட்டணி வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.