செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (16:57 IST)

கவர்னர் என்ன பெரியாரா?: குளியலறை விவகாரத்தில் எச்.ராஜாவின் பதிலடி!

கவர்னர் என்ன பெரியாரா?: குளியலறை விவகாரத்தில் எச்.ராஜாவின் பதிலடி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று கடலூரின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவர் இளம்பெண் ஒருவர் கீற்று மறைப்பில் குளித்துக்கொண்டு இருந்ததை பார்த்ததாக செய்திகள் பரவின.
 
இதனால் பலரும் சமூக வலைதளங்களில் ஆளுநரை கிண்டலடித்து கருத்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத்தின் சுப வீரபாண்டியன் ஆளுநரை கிண்டலடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
 
அதில் அவர், கடலூரில் ஆய்வுக்குச் சென்றிருந்த ஆளுநர் ஒரு குளியலறைக்குள் செல்ல, உள்ளே குளித்துக் கொண்டிருந்த பெண் பதறியடித்து ஓடி வந்ததாக விகடன்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லோரும் இனிமேல் தாழிட்டு விட்டுக் குளிக்கவும். எந்நேரமும் ஆளுநர் ஆய்வுக்கு வரக்கூடும் என கூறியிருந்தார்.
 
இதற்கு அவரது டுவிட்டர் பதிவிலேயே பல பஜகவினர் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் அவரது கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், கவர்னர் என்ன ஈ.வெ.ராவா. இது மாதிரியான அவதூறு பரப்ப வெட்கமாக இல்லை என கூறியுள்ளார்.