வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:45 IST)

''ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்'' : டிடிவி. தினகரன் வரவேற்பு

dinakaran
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இதற்கு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலலைமையிலான திமுக அரசு இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை  சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அதன் ஒப்புதலுக்காக ஆளுனருக்கு அனுப்பப்பட்டது. 

இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று  ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து,  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. 

பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தல்களுக்குப் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கதக்கது. தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அமமுக சார்பிலும் ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.