செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (19:16 IST)

தியேட்டர்களில் 100% அனுமதி ரத்து… தமிழக அரசு உத்தரவு

தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கான உத்தரவுக்கு மருத்துவர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தற்போது அந்த 100% உத்தரவு ரத்து செய்து  மறு உத்தரவு வரும்வரை 50% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

 தமிழக அரசு விஜய்யின் கோரிக்கை ஏற்று தியேட்டர்களில் 100% அனுமதியளித்தது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வரிசைப்படிதான் வழக்கை விசாரிக்க முடியும் என நீதிமன்றம் கூறிவிட்டது. இவ்வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் நேற்று தியேட்டர் அதிபர்கள்,

தியேட்டர் அதிபர்கள், பொங்கலுக்கு 50% அனுமதி கிடைத்தால் அதில் மாஸ்டர் படத்தை மட்டுமே திரையிடுவதாக அறிவித்தனர்.  இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஈஸ்வரன் படக்குழு திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வரும் எனக் கூறினர்.

இந்நிலையில்  தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்காத நிலையில் தியேட்டர்கள் திறப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரும் 11 ஆம் தேதி வரை 50% அனுமதியளித்துள்ளதுடன் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு  கூறியது.

தற்போது தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கான உத்தரவுக்கு மருத்துவர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தற்போது அந்த 100% உத்தரவு ரத்து செய்து  மறு உத்தரவு வரும்வரை 50% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.