புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (10:51 IST)

”திரும்பி போ மோடி”, டிவிட்டரில் டிரெண்டாகும் “#gobackmodi” ஹேஷ்டேக்

மோடி இன்று சென்னை ஐஐடியில் நடைபெரும் விழாவிற்கு வருகை தந்த நிலையில் டிவிட்டரில் தமிழர்களின் #gobackmodi ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இன்று சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தற்போது உரையாற்றி வருகிறார். பாஜக கட்சிக்கும் மோடிக்கும் எப்பொழுதும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள், மோடி எப்பொழுது மாநிலங்களுக்கு வருகை தந்தாலும் தங்களது பலத்த எதிர்ப்பை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

முன்னதாக மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது தமிழ்நாடு முழுவதும் கருப்பு பலூன் பறக்கப்பட்டது. ஆங்காங்கே கருப்புச்சட்டை அணிந்து ”Go back Modi” போன்ற எதிர்ப்பு பலகைகளை வைத்து போராட்டம் செய்தனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு நிலவியது. அதன் விளைவாக #gobackmodi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

அதனைத் தொடர்ந்து இன்றும் சென்னை ஐஐடிக்கு வருகை தந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதலிடத்தில் உள்ளது. முன்னதாக ஒரு முறை கேரளாவுக்கு வருகை தந்த மோடிக்கு பலத்த எதிர்ப்பு காட்டும் வகையில் #pomonemodi (போ மகனே மோடி) என்ற ஹேஷ்டேக் கேரளா மநிலத்தவர்களால் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.