வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : புதன், 30 அக்டோபர் 2019 (14:31 IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு : இளைஞரின் தீரச் செயல் ! வைரல் வீடியோ

சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப் பட்டியைச் சேர்ந்த  2 வயது சிறுவன் சுஜித், அருகே இருந்த போர்வெல் கிணற்றுக்குள் விழுந்தான். அவனை மீட்கும் முயற்சியில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டனர்.  ஆனால் முயற்சி பலனின்றி சுஜித் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒருஆட்டுக்குட்டியை இளைஞர் ஒருவர் மீட்ட காட்சி வைரலாகி வருகிறது.
அதாவது, வெளியில் புல் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஆடு, ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. அதைக் காப்பாற்ற  ஒரு குழுவினர் முயன்றனர். அப்போது ஒரு இளைஞர் தன் உடலை கிணற்றில்  இறங்கினார். அவரை  மற்றவர்கள்  மேலிருந்து பிடித்துக்கொண்டனர்.
 
பின்னர்,ஒரு சில நிமிடங்களில் அந்த ஆட்டுக்குட்டியை,இளைஞர்  பத்திரமாக மீட்டார். உயிரைப் பணயம் வைத்து ஆட்டுக் குட்டியை மீட்ட இளைஞருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ  வைரலாகி வருகிறது.