திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2016 (13:23 IST)

கபாலியை தாறுமாறாக விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த பெண் : வைரல் வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி திரைப்படம் ஒரு பக்கம் வசூலில் சாதனை புரிந்தாலும், மறுபக்கம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.


 

 
சினிமாக்களை விமர்சிக்கும் விமர்சகர்கள் தற்போது பெருகி விட்டார்கள். அதுவும், இணையதளத்தில், ஆளாளுக்கு ஒரு திரைப்படத்தை பற்றி விமர்சனம் என்ற பெயரில் தனக்கு தோன்றியதையெல்லாம் பேசி யூடியூபில் பதிவு செய்கிறார்கள். அவர்களுக்கென்று சில ரசிகர்கள் கூட்டமும் உண்டு.
 
அதுபோல், வழக்கமாக இணையதளத்தில் சினிமாவை விமர்சனம் செய்யும் ஒரு நபர் கபாலி திரைப்படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனத்தை கூறியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு பெண் அவருடைய விமர்சனத்துக்கு எதிராக ஆவேசமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
கபாலி திரைப்படம் பற்றி நடுநிலைமையோடு விமர்சித்திருக்கும் அந்த பெண்ணின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..