1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (12:29 IST)

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருடன் காதல் ; சென்னை காவல் நிலையத்தில் களோபரம்

சென்னையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர், பெற்றோரையும் மீறி, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவருடன் காதல் கொண்டு, அவருடன் சென்றுவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


 

 
சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் 26 வயது மகள், அடையாறில் உள்ள ஒரு பலகலைக்கழகத்தில் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பை படித்துவந்தார். கடந்த 28ம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர். 
 
அதில், அவர் வேளச்சேரியில் ஒரு நபருடன் தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நபர், பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் ஆவார். அவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அப்பெண் அவருடன் வாழ்ந்து வந்ததுள்ளார்.
 
அப்பெண்ணை போலீசார் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவரது பெற்றொர்களும் காவல் நிலையம் வந்து, தங்களுடன் வந்துவிடுமாறு அவரிடம் கெஞ்சினர். அந்த நேரம், வழக்கறிஞருடன் வந்த அப்பெண்ணின் காதலர் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அதன் பின் போலீசார் அறிவுரை கூறி அப்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 
 
ஆனால், காவல் நிலையத்திற்கு வெளியே பெற்றோருடன் வந்த அப்பெண், அங்கிருந்த தனது காதலருடன் கிளம்பி சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.